தமிழ் சினிமாவே ஆபத்தில் இருக்கிறது.. விஜய்க்கு ஆதரவாக வந்த பிரபலங்களின் பதிவு
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம், அதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கிலும் தீர்ப்பு ஜனவரி 9ம் தேதி தான் வரும் என அறிவிக்கப்பட்டதால் தயாரிப்பாளர் வேறு வழியின்றி ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஜனநாயகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை பற்றி பல பிரபலங்களும் பேசி இருக்கின்றனர்.

சிபிராஜ்
நடப்பதை எல்லாம் பார்க்கும்போது ஜனநாயகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை அது மிகப்பெரிய வெற்றி பெற ஒரு perfect stage செட் ஆகிறது போல இருக்கிறது என கூறி இருக்கிறார்.
Confident ஆ இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என சிபிராஜ் பதிவிட்டு இருக்கிறார்.
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻@actorvijay
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 7, 2026
சனம் ஷெட்டி
வா தல நாங்க இருக்கோம் என நடிகை சனம் ஷெட்டி பதிவிட்டு இருக்கிறார்.
ரத்ன குமார்
"தமிழ் சினிமா ஆபத்தில் இருக்கிறது. வலிமையாக இருங்கள் விஜய் சார். படம் என்று ரிலீஸ் ஆகுதோ அன்று தான் திருவிழா" என ரத்ன குமார் பதிவிட்டு இருக்கிறார்.
Its Painful to see big films getting postponed time and again for the past few months 💔. Tamil Film Industry is in Grave Danger. Stay Strong @actorvijay sir and Team #JanaNayagan. You have Revived Tamil cinema during covid times. We know you will do it for the One Last time🥺.… https://t.co/pbZdAnc6Ep
— Rathna kumar (@MrRathna) January 7, 2026