விஜய்யின் ஜனநாயகன் பட வழக்கில் சென்சார் குழு எடுத்த அதிரடி முடிவு...
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் பூஜா ஹெட்ச் நாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் முதன்முறையாக 2026ம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்க்கொள்ள உள்ள நிலையில் அரசியலை மையப்படுத்தி இப்படம் வெளியானால் செம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி படம் வெளியாகவில்லை.

தணிக்கை குழு
இப்படத்தை ரிலீஸ் நேரத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தை மறுஆய்வு குழு பரீசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட சென்சார் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சென்சார் ஆணையம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.