"தல இருந்ததால தப்பிச்சீங்க" - சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியிடம் ரசிகர் சொன்ன விஷயம்..
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்துடன் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர், அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.
வலிமை படத்தில் அவர் குற்றவாளிகளை பிடிக்கும் குற்றவியல் பிரிவு போலீஸாரின் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் பெண்ணாக நடித்துள்ளார்.
அவரின் பெரும்பாலான காட்சிகள் அஜித் மற்றும் ஹுமா குரேஷியுடன் தான் இருந்தது. இப்படத்தின் முக்கிய காட்சியில் சைத்ரா ரெட்டியை அஜித் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி வந்திருக்கும்.
இதுகுறித்து சயித்ராவிடம் இன்ஸ்டாவில் பேசிய ரசிகர். “எங்க தல இருந்ததுனால நீங்க தப்பிச்சீங்க.. பொழைச்சுட்டீங்க" என சொல்லியுள்ளார். இதற்கு ஜாலியாக பதிலளித்துள்ள சைத்ரா “அட. ஆமாப்பா.. ஜஸ்ட் மிஸ்” என கூறியுள்ளார்.