தனது 29வது பிறந்தநாளை கியூட்டாக கொண்டாடிய சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.. வீடியோவுடன் இதோ
கயல் சீரியல்
அப்பாவை இழந்து வாடும் ஒரு குடும்பத்தின் கதையாக கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கயல் தனது குடும்பத்தில் அப்பா இருந்தால் அனைவருக்கும் என்ன செய்வாரோ அதை நாம் செய்ய வேண்டும் என்று வாழ்கிறார்.
குடும்பத்தினர் ஒரு நிலைக்கு வரும் வரை காதல் வந்தாலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார். சில எபிசோடுகளுக்கு முன்பு தான் எழில்-கயல் நிச்சயதார்த்தம் பல பிரச்சனைகளுக்கு நடுவில் நடந்தது.
திருமணத்திற்குள் கயல் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
பிறந்தநாள்
ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து தமிழ் மக்களிடம் பிரபலம் ஆனவர் இப்போது நாயகியாக சன் டிவியின் கயல் தொடரில் நடித்து கலக்கி வருகிறார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சைத்ரா ரெட்டி இன்று ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு இன்று பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாடும் ஒரு கியூட்டான வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.