ஜெயிலர் பட வாய்ப்பை தவறவிட்ட சன் டிவி சீரியல் ஹீரோயின்! மருமகள் ரோலில் நடிக்க இருந்தது இவரா?
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வருடம் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்கள் மற்றும் லாபத்தில் பங்கு செக் கொடுக்கும் அளவுக்கு வசூலை வாரிகுவித்தது ஜெயிலர் படம்.
இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் என்ற நடிகை நடித்து இருந்தார். அவருக்கு இந்த படம் பெரிய அளவு புகழை கொடுத்து இருக்கிறது. அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
மிஸ் செய்த சைத்ரா ரெட்டி
ரஜினி மருமகளாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சன் டிவி கயல் சீரியல் ஹீரோயின் சைத்ரா ரெட்டிக்கு தான் வந்திருக்கிறது. ஆனால் அவர் சீரியலில் நடித்துக்கொண்டே ஜெயிலர் படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை இருந்ததால் மறுத்துவிட்டாராம்.
அதற்கு பிறகு தான் அந்த ரோலில் மிர்னா மேனனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அஜித்தின் வலிமை படத்தில் நடித்த சைத்ரா ரெட்டி, ரஜினி படத்தை மிஸ் செய்தது பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
