கயல் சீரியலை முடித்த கையோடு புதிய லுக்கிற்கு மாறிய நடிகை சைத்ரா ரெட்டி... வீடியோவுடன் இதோ
சன் டிவி
சன் தொலைக்காட்சி, இதற்கு பெரிய அறிமுகமே தேவையில்லை.
இப்போது உள்ள சின்ன குழந்தைகளை கேட்டால் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்கள், சீரியல்கள் குறித்து எல்லாம் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
கயல் சீரியல்
இந்த தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய ஜோடி இணைய பெரிய எதிர்ப்பார்ப்புடன் துவங்கப்பட்ட சீரியல் தான் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இணைய இந்த சீரியல் துவங்கப்பட்டது.

அப்பாவை இழந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் தனது குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணாக கயல் சீரியல் கதைக்களம் இருந்தது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் கடந்த அக்டோபர் 2026ம் ஆண்டு அதாவது கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.
சீரியல் முடிந்தது பல ரசிகர்களுக்கு பெரிய ஷாக்கிங் விஷயமாக அமைந்தது.

புதிய லுக்
இப்போது கயல் சீரியல் முடிவடைந்து அதில் நடித்தவர்கள் அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பதிவில் நாம் நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட ஒரு வீடியோ குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

அதாவது நீளமான முடிவுடன் இத்தனை நாள் இருந்த நடிகை சைத்ரா ரெட்டி சீரியல் முடித்த கையோடு புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். அதாவது தனது தலைமுடியை பாதியாக கட் செய்து புதிய லுக்கில் அவர் வெளியிட்ட வீடியோ இதோ,