சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் திருமணம் - இதுவரை நீங்கள் பார்த்திராத அன்ஸீன் வீடியோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் TRP எகிற முக்கியமான காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோஹினி.
இந்த சீரியலில் வில்லியாக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.
இவர் கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் தான், இவருக்கும் ஒளிப்பதிவாளராக திரையுலகில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
நடிகை சைத்ரா ரெட்டியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வாழ்த்துக்களை குவித்தது.
இந்நிலையில் திருமணமாகி இத்தனை நாட்கள் கழித்து, சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்களுக்காக திருமணத்தின் அன்ஸீன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..