மகேஷ் பாபுவுடன் ஒன்றாக இணைந்து நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை.. யாருனு நீங்களே பாருங்க
நடிகர் மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சர்க்காரு வாரி பாட்டா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
நடிகர் மகேஷ் பாபு படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பரங்களிலும் நடிப்பார் என்பதை நாம் அறிவோம்.
மகேஷ் பாபுவுடன் நடிகை சைத்ரா ரெட்டி
அந்த வகையில் சமீபத்தில் பிரபல விளம்பர படம் ஒன்றால் நடித்துள்ளார். இதில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிகை சைத்ரா ரெட்டியும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.
நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.