சிறிய விஷயத்தை பிரச்சனையாக மாற்றிய சந்தா! சேரனை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ
Chandha creates problem in ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், ஒரு சிறிய விஷயத்தை பிரச்சனையாக சந்தா மாற்ற, அதன் விளைவாக அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை வருகிறது. இதில் சேரனை சோழன் அடித்துவிடுகிறார். அதைப்பற்றிய புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அய்யனார் துணை
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது பல்லவன் படித்து பட்டம் வாங்குகிறார். அதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்லூரிக்கு செல்கின்றனர். அங்கு, தனது தம்பி பட்டம் வாங்கியதை பார்த்து பூரித்துப்போகும் சேரன், 'இவன் என்னுடைய தம்பி மட்டுமல்ல, என் உலகமே இவன்தான்' என கூறுகிறார்.

சந்தா அரங்கேற்றிய பிரச்சனை
பல்லவனை தன் உலகம் என சேரன் சொன்னதும், அப்போ நான் அவருடைய உலகம் இல்லையா என நிலாவிடம் கண்கலங்குகிறார் சந்தா. இதை கேட்டு, 'நீங்க என்ன லூசா' என சந்தாவை பார்த்து கேட்கிறார் நிலா. இதை வீட்டில் அனைவர் முன்னிலையிலும் கூறி பிரச்சனையை உண்டாக்குகிறார் சந்தா.

சேரனை அடித்த சோழன்
அப்போது வாக்குவாதம் ஏற்பட, இதில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையே மோதல் வருகிறது. ஒரு கட்டத்தில் சோழன் தெரியாமல் சேரனை அடித்து விடுகிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புரோமோ வீடியோ: