கணவரை பிரிந்துவிட்டாரா சீரியல் நடிகை சாந்தினி! அவரே கொடுத்த விளக்கம்
சித்து +2 படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகம் அனைவர் சாந்தினி. அவர் அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி போட்டோஸ்
சமீபத்தில் சாந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கிளாமர் போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவர் இப்படி போஸ் கொடுத்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
நான் இதற்குமுன்பே கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இருக்கிறேன். தற்போது சீரியல்களில் நடிப்பதால் இந்த போட்டோ பற்றி அதிகம் பேர் பேசுகிறார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.
கணவரை பிரிந்துவிட்டேனா?
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தினி சமீபகாலமாக அவரது கணவர் உடன் போட்டோக்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவர் கணவரை பிரிந்துவிட்டாரா என நெட்டிசன் ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் கூறிய சாந்தினி தான் பர்சனல் வாழ்க்கையை பிரைவேட் ஆக வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதனால் அவர் கணவரை பிரியவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.