புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவியின் சந்திரலேகா சீரியல் நடிகை நாகஸ்ரீ... எந்த சீரியல்?
சந்திரலேகா
சன் டிவியில் ஸ்வேதா, நாகஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒளிபரப்பாகி வந்த சீரியல் சந்திரலேகா.
கடந்த அக்டோபர் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக, ரசிகர்களின் பேராதரவுடன் பல வருடங்கள் ஒளிபரப்பானது. 2315 எபிசோடுகளுடன் இந்த சீரியல் கடந்த 2022ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடராகும்.
நியூ சீரியல்
சந்திரலேகா சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நாகஸ்ரீ இப்போது சன் தொலைக்காட்சியின் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மல்லி சீரியல் மூலம் தான் நாகஸ்ரீ என்ட்ரி கொடுக்கிறாராம், ஆனால் என்ன கதாபாத்திரம் என்ற விவரம் தெரியவில்லை.