8 வருடமாக ஓடும் சந்திரலேகா சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகர்! ரசிகர்கள் ஷாக்
சன் டிவியில் கடந்த ஆறேழு வருடங்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா. அதை விமர்சித்த அதிக அளவுக்கு மீம்களையும் இணையத்தில் பார்த்திருப்போம். அப்படி தொடர்ந்து 2000 எபிசோடுகளுக்கும் மேல் ஓடியிருக்கும் அந்த சீரியலில் இருந்து நடிகர் தற்போது வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தொடரில் சபரியாக நடித்து வந்த அருண் ராஜன் தான் தற்போது வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக அஸ்வின் என்பவர் புது சபரியாக நடிக்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பை அருண் ராஜன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
சொந்த காரணங்களுக்காக நான் சந்திரலேகா தொடரில் இருந்து வெளியேறுகிறேன். ஷூட்டிங்கிற்கு வர முடியாத காரணத்தினால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என அவர் கூறி இருக்கிறார்.
"62வது எபிசோடில் நான் சபரியாக நடிக்க தொடங்கினேன், கிட்டத்தட்ட 2200 எபிசோடுகள் கடந்துவிட்டேன். சின்னத்திரையில் அனைத்து ரெக்கார்டுகளையும் சந்திரலேகா முறியடித்துவிட்டது" என அருண் ராஜன் எழுதி இருக்கும் கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.