கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா- அழகிய போட்டோ
சீரியல் நடிகை
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று சந்திரலேகா. இந்த தொடரில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ். சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.
ஏ.பி. ராஜேந்திரன் இயக்கிய இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 8 வருடங்களுக்கு மேலாக சீரியல் ஒளிபரப்பனது, இந்த தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் ஸ்வேதா.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்துவந்த இவர் 2007ம் ஆண்டு அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இறுதியாக ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தில் நடித்த இவர் பட வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் வந்தார்.

திருமணம்
கடந்த ஆண்டு ஸ்வேதா சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளர் மால் முருகனை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் தான் ஸ்வேதா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் எப்படி உள்ளது?- Live Updates 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    