இதுவரை சந்திரமுகி 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. எதிப்பார்த வசூல் வரவில்லையா
சந்திரமுகி 2
சந்திரமுகி 2 திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி திரைக்கு வந்தது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் வாரம் இறுதி வரை வசூலில் பட்டையை கிளப்பி சந்திரமுகி 2 அதன்பின் சற்று குறைய துவங்கியது.
வசூல் விவரம்
இந்நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள முழு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரமுகி 2 திரைப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

ரூ. 100 கோடி வசூல் வரும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை ரூ. 50 கோடி மட்டுமே வந்துள்ளது. இதனால் சந்திரமுகி ஆவெரேஜ் படம் என கருதப்படுகிறது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan