முதல் நாள் சந்திரமுகி 2 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சந்திரமுகி 2
சந்திரமுகி முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை உலகம் அறியும். ரஜினிக்கு 2005ஆம் ஆண்டு கம் பேக் கொடுத்த திரைப்படமும் அதுவே.
அதனுடைய இரண்டாவது பாகம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடிப்பில் சந்திரமுகி 2 நேற்று வெளியான நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் பாகத்தை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று விமர்சனம் இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
முதல் நாள் வசூல்
ஆம், முதல் நாள் மட்டுமே சந்திரமுகி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது சந்திரமுகி 2 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங்.
கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை சந்திரமுகி 2 படைக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
