இந்தியா என்ற பெயருக்கு அர்த்தமே இல்லை, மாத்தணும்.. சந்திரமுகி 2 ஹீரோயின் கங்கனா
இந்தியாவின் பெயரை பாரத் என மத்திய அரசு மாற்றப்போவதாக நேற்று தகவல் வெளியானதில் இருந்து, அனைத்து இடங்களிலும் அது பற்றிய விவாதம் தான் நடந்து கொண்டிருக்கிறது.
அரசியல் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கூட அது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
கங்கனா பேட்டி
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் கங்கனா சென்னையில் ஒரு இதழுக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் 'இந்தியா என்ற பெயருக்கு அர்த்தம் இல்லை. பாரத் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தை, அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.'
'இந்தியா என்ற பெயர் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் கொடுத்த பெயர். அதனால் பாரத் என பெயரை மாற்ற வேண்டும்' என கங்கனா கூறி இருக்கிறார்.