தள்ளிப்போன சந்திரமுகி 2.. காரணம் என்ன? சோலோ ரிலீஸில் பட்டையை கிளப்பப்போகும் மார்க் ஆண்டனி
செப்டம்பர் 15 ரிலீஸ் படங்கள்
அடுத்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருந்தது. ஆம், சந்திரமுகி 2 மற்றும் மார்க் ஆண்டனி என பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு திரைப்படங்களும் செப்டம்பர் 15 வெளியாவதாக இருந்தது.
இதனால் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருந்தனர். ஆனால், அதில் ஒரு திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரேஸில் இருந்து விலகி இருக்கிறது.

டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்
தள்ளிப்போன சந்திரமுகி 2
ஆம், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் தான் செப்டம்பர் 15ஆம் தேதி ரேஸில் இருந்து விலகியுள்ளது.
சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது VFX வேலைகள் முடியாத காரணத்தினால் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறது.
இதனால் விஷால், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் சோலோ ரிலீஸாக செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
