சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்த நடிகையா இது! எப்படி மாறிவிட்டார் பாருங்க
சந்திரமுகி
2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்களில் கண்டிப்பாக சந்திரமுகியும் இடம்பெறும்.
அந்த அளவிற்கு மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை இப்படம் பிடித்துள்ளது. சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர் நடிகை சொர்ணா மேத்யூ. இப்படத்திலும் சொர்ணா என்கிற கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.
இவர் தாய் மனசு என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்துகொண்ட நடிகை சொர்ணா மேத்யூ, சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
எப்படி மாறிவிட்டார் பாருங்க
ஆனால், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவான நபராக இருக்கும் நடிகை சொர்ணா மேத்யூ அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் நடித்தவரா இவர் என கேட்டு வருகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படங்கள்..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
