சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகி இந்த முன்னணி நடிகையா..! வெளிவந்த சூப்பர் தகவல்
சந்திரமுகி 2
2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப்போகிறார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இப்படத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.
கதாநாயகியாக இவரா
இந்நிலையில், தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகை திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா ஏற்கனவே நாயகி மற்றும் மோஹினி என இரு ஹாரர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.