சந்திரமுகி 2 படத்தில் இரண்டு கதாநாயகிகளா..! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
சந்திரமுகி 2
பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
அந்த தகவல் தற்போது ஏறக்குறைய 90% சதவீதம் உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
இரண்டாம் கதாநாயகியாக இவரா
இந்நிலையில், லட்சுமி மேனனை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளாராம். ஆம், பிரபல நடிகை மஹிமா நம்பியாரும் இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
