விஜய் டிவியின் ஒரே சீரியலில் திடீரென இரண்டு நடிகர்கள் மாற்றம்- அவர்களுக்கு பதில் யார் நடிக்கிறார்கள் பாருங்க
சீரியல்கள் தான் இப்போது மக்களின் அதிக பொழுதுபோக்காக இருக்கிறது. கொரோனா காலத்தில் தொலைக்காட்சிகளில் மாற்றி மாற்றி சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகின.
பழைய தொடர்களை முடித்து புதிய சீரியல்கள் எல்லாம் ஒளிபரப்பாக ஆரம்பித்தன. விஜய்யில் கொரோனா பிரச்சனைகளுக்கு பின் தொடங்கப்பட்ட ஒரு தொடர் காற்றுக்கென்ன வேலி.
இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து சூர்யா வேடத்தில் நடித்து வந்தவர் தர்ஷன், அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இந்த சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக செய்திகள் வந்தன.
அவருக்கு பதில் புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். இதே சீரியலில் மீனாட்சி கதாபாத்திர மாற்றமும் நடந்துள்ளது. இந்த வாரத்திற்கான புரொமோவில் புதிய மீனாட்சியாக நடிப்பவர் யார் என்பதை காட்டியுள்ளார்கள்.