ஜீ தமிழின் ஹிட் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகர்... அவருக்கு பதில் யார்?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.
இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் சேனலும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் அயலி, வாரிசு போன்ற புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.
மாற்றம்
சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய புதிய சீரியலில் இருந்து நடிகர் ஒருவர் வெளியேறிய தகவலும் அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற செய்தியும் வந்துள்ளது.
அதாவது கடந்த ஜுன் 30ம் தேதி முதல் மதியம் ஒளிபரப்பாகி வருகிறது வாரிசு சீரியல். பொறுப்பில்லாமல் சுற்றும் ஒரு பணக்கார வீட்டி நபரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் பிரேம்குமார் கதாபாத்திரத்தில் யோகேஷ் நடித்து வந்தார், ஆனால் அவர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதில் பிரேம்குமாராக திலக் நடிக்க உள்ளாராம்.