மாமன்னன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்.. மிஸ் ஆனதால் வருத்தமே இல்லையாம்
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
வடிவேலுவின் நடிப்பை பற்றி தான் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டி இருந்தனர். காமெடி நடிகராக அறியப்பட்ட வடிவேலு இப்படி எமோஷ்னலான ரோலிலும் மிரட்டி இருந்தார் என பலரும் கூறினார்கள்.

முதலில் நடிக்க இருந்தது அவரில்லை
அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது சார்லி தான் என முன்பே ஒரு செய்தி பரவியது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் சார்லி பதில் அளித்து இருக்கிறார்.
"பொதுவாக நடித்த பிறகு தான் நல்லா நடிச்சிருக்காங்க என பெயர் வரும். அந்த படத்தில் நான் நடிக்காமலேயே நிறைய பேர் என்னை பாராட்டி இருக்கிறார்கள். அவர் நடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்தார்கள். அந்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்."
"நிறைய படங்கள் நான் நடிப்பதாக இருந்து அதன் பின் வேறு நடிகர்களுக்கு சென்று இருக்கிறது, அதே போல மற்ற நடிகர்களின் ரோல்களுக்கு எனக்கு வந்து இருக்கிறது. பேசி உறுதியாகும் ரோலில் மட்டும் நான் ஒழுங்காக நடிக்கிறேன்" என சார்லி கூறி இருக்கிறார்.

November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri