Chatha Pacha: The Ring of Rowdies திரை விமர்சனம்
Adhvaith Nayar இயக்கத்தில் ரோஷன் மேத்யூ மேலும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான Chatha pacha படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்
3 சிறுவர்கள் வால்டர் என்பவரை ரோல் மாடலாக கொண்டும், WWE வளர்ச்சியின் ஆதிக்காத்தாலும் ரஸ்லீங் மீது மிகுந்த விருப்பம் கொள்கின்றனர். லிட்டில், வெற்றி, சேவியர் என்ற 3 பேரும் சிறு வயதிலிருந்தே ரஸ்லீங் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் வளர்ந்து பெரியளாக லிட்டில் மீண்டும் ஊருக்கு வந்து சேவியர் உடன் இணைந்து ரஸ்லீங் மேட்ச் ஒன்றை தொடங்குகிறார். Friday Fight என்று அதற்கு பெயரும் வைக்கின்றனர்.

ஆரம்பமே அசத்துலடன் ஆரம்பிக்க, இந்த 3 பேரில் வெற்றி ஜெயிலில் இருக்கிறார், இந்த வெற்றி ஜெயிலில் இருக்க சேவியர் தான் காரணம், ஆனால் இந்த உண்மை வெற்றிக்கு தெரியாது, வெற்றியின் மகளை சேவியர் வளர்த்து வருகிறார்.
வெற்றி வெளியே வந்து அவரும் ஜாலியாக ரஸ்லீங் விளையாட, சிறு வயதிலிருந்தே இவர்களுக்கு ஆப்போசிட் ஆக இருந்த செரியன் வெற்றியிடம் உண்மையை சொல்ல, பிறகு நண்பர்களுக்குள் சண்டை வர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
சேவியர் ஆக ரோஷன், இவர் நடித்தாலே ஹிட் என்பது போல் மிகவும் செலக்டிவ் ஆக தான் படத்தை தேர்ந்தெடுக்கிறார், சிறப்பாகவும் நடித்துள்ளார், இவர் மட்டுமில்லை லிட்டில், வெற்றி, செரியன் என அனைவருமே தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
அதோடு இந்த ரஸ்லீங் கூட்டத்தில் போட்டியாளராக வரும் 3 நண்பர்கள் ஒரு தோழி, ஒரு பெண் ரெப்ரி என அனைவருமே அட்டகாசம் செய்துள்ளனர். அதிலும் முதல் பைட் அந்த பெண்ணும், அந்த பையனும் போடும் சண்டை அடிபொலி.

படத்தின் முதல் பாதி செம ஜாலியாகவே செல்கிறது, வெற்றியின் மகளாக வரும் சின்ன குழந்தை கூட செம கியூட் நடிப்பு, இப்படி ஜாலியாக செல்லும் முதல் பாதி வெற்றி அறிமுகத்தில் இடைவேளை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
இதை தொடர்ந்து பிறகு என்ன நாம் பார்த்த பல படங்கள் சாயல் தான், வில்லன் ஏத்திவிட்டு நண்பர்களுக்குள் சண்டை, கிளைமேக்ஸில் ஒன்று சேர்ந்து வில்லனை அடிப்பது என்ற டெம்ப்ளேட் திரைக்கதையில் சிக்கி கொஞ்சம் ஆவரேஜ் ஆகவே செல்கிறது, கிளைமேக்ஸ் கேமியோ ஒரு ஆறுதல். டெக்னிக்கலாக கேமரா, இசை, ஸ்டேண்ட் என எல்லாமே டாப் நாச்.

க்ளாப்ஸ்
முதல் பாதி
டெக்னிக்கல் ஒர்க்
சண்டைக்காட்சி
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி யூகிக்க கூடிய திரைக்கதை.
மொத்தத்தில் செம ஜாலியாக தொடங்கிய இந்த பஞ்ச், இரண்டாம் பாதியில் தடுமாறி கிளைமேக்ஸ் கேமியோவால் காப்பாற்றப்படுகிறது.
