இயக்குனர் சேரனின் அம்மா மற்றும் அக்காவை பார்த்துள்ளீர்களா ! அவரே வெளியிட்ட சமீபத்திய போட்டோ
இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் பல சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட சிறந்த படங்களில் அவர் நடித்துள்ளார்.
சேரன் விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார்.
இந்நிலையில் சேரன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மா மற்றும் அக்காவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் "அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு... சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம் ... எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்.. அருகில் இருப்பவர் எங்க அக்கா.." என பதிவிட்டுள்ளார்.
அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு... சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம் ... எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்.. அருகில் இருப்பவர் எங்க அக்கா.. pic.twitter.com/kuGI5irPjN
— Cheran (@directorcheran) August 14, 2021