குக் வித் கோமாளியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
வெங்கடேஷ் பட்
சமையல் துறையில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர்ஸ்டார், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
இதில் கிச்சன் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியை விட, குக் வித் கோமாளி தான் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. கோமாளிகளுடன் இவர் செய்யும் கலாட்டா, நகைச்சுவைகள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்தது.
கடந்த நான்கு சீசன்கள் நன்றாக நடந்து வந்த நிலையில், இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை, விலகிவிட்டேன் என கூறி அதிர்ச்சி கொடுத்தார் செஃப் வெங்கடேஷ் பட். இவருடைய செஃப் தாமு மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்கள். இது மிகப்பெரிய வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
சொத்து மதிப்பு
தனது துறையில் முதலில் மற்ற ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த வெங்கடேஷ் பட், 2007ஆம் ஆண்டு சொந்தமாகவே உணவன்கண்களை ஆரம்பித்தார். மேலும் இவர் தனக்கென ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து அதில் சமையல் பாத்திரங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் சொத்து மதிப்பு குறித்து தான் பார்க்க போகிறோம். இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 1 மில்லியன் டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
