குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர்.
விரைவில் 5ம் சீசனை தொடங்குவதற்கான பணிகளை விஜய் டிவி தொடங்கி இருக்கிறது. பல முக்கிய பிரபலங்கள் ஷோவில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
விலகிய நடுவர்
குக் வித் கோமாளியில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் நடுவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் போட்டியாளர்களின் சமையலை பற்றி விமர்சனங்கள் கொடுப்பது மட்டுமின்று காமெடியாகவும் பல்வேறு விஷயங்களை செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.
ஆனால் 5ம் சீசனில் நான் பங்கேற்க மாட்டேன் என வெங்கடேஷ் பட் அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
வேறொரு வாய்ப்பு வந்திருக்கிறது, அது என்ன நிகழ்ச்சி என விரைவில் அறிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் வெங்கடேஷ் பட் வேறு சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது.