செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவிற்கு திடீர் திருமணம்- மாப்பிள்ளை இவரா?
செல்லம்மா சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று செல்லம்மா. இதில் நாயகியாக நடிக்கும் அன்ஷிதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.
இவரும் இதே தொடரில் நடிக்கும் அர்னவும் காதலிப்பதாக நிறைய கிசுகிசு எல்லாம் வந்து இப்போது ஓய்ந்துள்ளது. சீரியல் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு TRP பெற்று வருகிறது.
திடீர் கல்யாணம்
இந்த நிலையில் தான் நடிகை அன்ஷிதாவிற்கு திருமணம் நடப்பது போல் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உடனே என்னது இவருக்கு திருமணமா என ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் அந்த புகைப்படம் செல்லம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்ட ஒன்று. செல்லம்மா மற்றும் மலரை கடத்தி வைத்திருக்கும் மாணிக்கம் வேண்டாம் என உதறிய தனது மனைவிக்கு மீண்டும் தாலி கட்டுகிறார்.
அந்த காட்சிகளின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. நிஜத்தில் அன்ஷிதா இன்னும் சிங்கிளாக தான் உள்ளார்.
17 வயதில் கல்யாணம், கஷ்டம், விவாகரத்து- சோகமான விஷயங்களை கூறிய நடிகை ரேகா நாயர்