சென்னை மற்றும் உலகம் முழுவதும் மாநாடு படம் 4 நாட்களில் செய்த வசூல்- வெற்றி மழையில் சிம்பு
நடிகர் சிம்பு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர். நடிப்பை தாண்டி தமிழ் சினிமாவிற்கு நிறைய டிரண்டான விஷயங்களை கொண்டு வந்துள்ளார்.
பாடல், ஸ்டைல், உடை என பல விஷயங்களில் மாற்றங்கள் அதிகம் கொண்டு வந்திருக்கிறார். இளமை துள்ளலோடு சினிமாவில் பயணித்து வந்த அவரது டிராக் இடையில் நிறைய மாறிவிட்டது.
சந்திக்காத பிரச்சனை, சர்ச்சைகள் இல்லை. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அதையெல்லாம் மறக்கும் அளவிற்கு இப்போது புது மனிதராக மாறி படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழ் சினிமாவிற்கு Time Loop என்ற புதிய கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
ரசிகர்களும் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். வெளிநாடுகளில் 4 நாட்களில் ரூ. 8 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 30 கோடியும், சென்னையில் ரூ. 2.94 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
