சென்னை நகரமே கடந்த சில தினங்களாக மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கி இபல முக்கிய பகுதிகளில் இன்னும் தண்ணீர் கொஞ்சமும் குறையாததால் மக்கள் படகு, ஜேசிபி, டிராக்டர் என பலவற்றில் ஏறி வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர்.
அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து ட்விட் பதிவிட்டு இருக்கிறார்.
இயன்ற உதவிகளை செய்யுங்க..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்.
இவ்வாறு விஜய் பதிவிட்டு இருக்கிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்…
— Vijay (@actorvijay) December 6, 2023

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
