இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது: இயக்குனர் சேரன் காட்டம்
இயக்குனர் சேரன் ஒரு காலத்தில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல சிறந்த படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர்.
அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றபோதே தான் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக கூறினார். ஆனால் அந்த படம் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்கவில்லை.
இனி முடியாது
இந்நிலையில் சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் விஜய் சேதுபதி பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் காட்டமாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார்.
"பண்ணல.. அந்த படம் பண்ண முடியாது இனிமே. நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும்."
"மேலும் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருஷத்துக்கு அவரது டேட் கிடைக்காது. அதனால் இப்போதையுக்கு அந்த படம் எடுக்க வாய்ப்பில்லை" என சேரன் கூறி இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
