தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது.. அரசை தாக்கி பதிவிட்ட இயக்குனர் சேரன்

By Parthiban.A Feb 01, 2026 03:33 PM GMT
Report

சமீபத்தில் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்ற பல பிரபலங்கள் அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி கூறி பதிவிட்டு இருந்தனர்.

ஆனால் விருது கிடைக்காத பிரபலங்கள் சிலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குனர் சேரன் தான் இயக்கி நடித்த திருமணம் படத்திற்கு விருது கிடைக்கவில்லை என கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.

தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது.. அரசை தாக்கி பதிவிட்ட இயக்குனர் சேரன் | Cheran Angry Post After Thirumanam Misses Award

சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது?

பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த "திருமணம்" திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது..

அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. அரசுகள் மாறலாம்.. அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சேரன் பதிவிட்டு இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US