கூவத்தூர் சர்ச்சை.. முன்னணி நடிகை தவறான தொழில் செய்வதாக அவதூறு! - கொந்தளித்த சேரன்
சினிமா நடிகைகள் தவறான தொழில் செய்பவர்கள் என முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேட்டி கொடுத்த சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவரது வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சை ஆகி இருக்கிறது.
இது பற்றி பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் காரணத்திற்காக ஒரு முன்னணி நடிகையின் பெயரை இப்படி கூறி இருப்பது பற்றி கண்டனங்கள் எழுந்து வருகிறது.
கொந்தளித்த சேரன்
இந்த விவகாரம் பற்றி இயக்குனர் சேரன் கொந்தளித்து X தளத்தில் ட்விட் செய்திருக்கிறார்.
"வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என சேரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... @VishalKOfficial @Karthi_Offl
— Cheran (@directorcheran) February 20, 2024
நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் https://t.co/fRNYxH5DAV

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
