சேரன்-சந்தா திருமணத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியானது... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதுமுகங்கள் சிலர் நடிக்க நாம் பார்த்து பழகிய கலைஞர்கள் பலர் நடிக்க தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் துணை.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 பேரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

கதையில் சோழன்-நிலா ஜோடிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். அவர்களை அடுத்து கதையில் பொறுப்புள்ள அண்ணனாக இருக்கும் சேரனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என பெரிய கேள்வி இருந்து வந்தது. அவருக்கும் திருமணம் நடக்கும் என தாலி கட்டுவதை வந்து நின்றுபோன கதையெல்லாம் உள்ளது.
கடைசியில் இப்போது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.

புரொமோ
பீகார் சென்று சேரன் நிச்சயதார்த்தத்தை சந்தாவுடன் செய்துமுடித்துவிட்டு சென்னை வந்த குடும்பத்தினர் அடுத்து திருமண வேலைகளை பரபரப்பாக செய்து வருகின்றனர். இதற்கு இடையில் சந்தாவை அவரது மாமா மிரட்டி வீட்டில் அடைக்கிறார்.

அவர் பீகாரில் இருந்து எப்படி தப்பித்து சேரனை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தான் சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ள நிலையில் இருவரும் பங்குபெறும் வகையில் ஸ்பெஷல் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,