நின்றுபோன சேரன் திருமணம்! துப்பாக்கி முனையில் சந்தாவை இழுத்து சென்ற கும்பல்... அய்யனார் துணை சீரியல்
சேரன் - சந்தா திருமணம்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. TRP-ல் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்த சீரியலில் தற்போது சேரன் - சந்தா திருமண காட்சிகள்தான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தம்பிகள் அனைவரும் சேர்ந்து தனது அண்ணனுக்கும், சந்தாவிற்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துவிட்டனர். தங்களுடைய உறவினர்களை எல்லாம் அழைத்து கோவிலில் சேரன் - சந்தா திருமணம் நடக்கவிருந்தது.

நின்றுபோன திருமணம்
இன்றைய எபிசோடில் சந்தா கழுத்தில் சேரன் தாலி கட்டவரும்போது திடீரென சந்தாவின் மாமா அங்கு துப்பாக்கியுடன் வந்து, திருமணத்தை நிறுத்திவிட்டார். அனிஷ் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் இந்த திருமணத்தை நடக்கவிடாமல் சந்தாவை அங்கிருந்து தரதரவென இழுத்து சென்றுவிட்டார்.

சேரனின் திருமணம் நின்றுபோன நிலையில், அடுத்து என்ன பண்ணலாம் என தெரியாமல் தம்பிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களிடம் இருந்து சந்தாவை காப்பாற்றுவார்களா? சேரனுடன் சந்தாவுக்கு திருமணம் நடக்குமா? என்பதை வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri