உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான்
அய்யனார் துணை
வீட்டின் உயில் தங்களிடம் இல்லாத காரணத்தினால், அய்யனார் துணை குடும்பத்தில் உள்ள அனைவரையும் வீட்டிலிருந்து வெளியேற போலீஸ் உத்தரவிட்டது.

இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்கினார்கள். ஆனால், எப்படியாவது அந்த உயிலை கண்டுபிடிக்க வேண்டும் என சோழனுடன் இணைந்து நிலா போராடி வந்தார். வீட்டிற்குள் தான் அந்த உயில் இருக்க வேண்டும் என ஐடியா போட்டு, வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி உயிலை கண்டுபிடித்தனர்.

தங்களது கைக்கு வீட்டின் உயில் கிடைத்து, அந்த வீட்டை நடேசனுக்காக தான் அவருடைய அப்பா கொடுத்துள்ளார் என தெரிந்தவுடன் மீண்டும் தங்களது வீட்டிற்குள் அய்யனார் துணை குடும்பம் வந்துவிட்டனர். போலீசிடம் நடேசன் பெயரில்தான் இந்த வீடு உள்ளது என உயிலை காட்டிய பின், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் எடுக்கப்பட்டது.

மீண்டும் வீட்டிற்குள் வந்தபின் வீட்டை சரிசெய்யும் வேளையில் இறங்கிவிட்டனர். குறிப்பாக நிலா ரூமுக்குள் பாம்பு எங்கிருந்து வந்ததோ, அங்கே வலை வைத்து அடைத்துவிட்டனர்.
அடுத்து நடக்கவிருப்பது
அய்யனார் துணை குடும்பம் மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பாண்டியனும் வானதியும் காதலிப்பதை வானதியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட, வீட்டிற்கு வரும் அந்த உறவினர், பாண்டியன் நல்ல பையனாக இருந்தால், வானதியை அவனுக்கே திருமணம் செய்துவிடுங்கள் என கூறுகிறார்.
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri