மனநோயாளி.. கடந்து செல்பவன் அல்ல நான்! வாட்டர்மெலன் திவாகருக்கு சேரன் பதிலடி
டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக பிக் பாஸ் புகழ் வாட்டர்மெலன் திவாகர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இது பற்றி இயக்குனர் சேரன் தற்போது முழு வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறார்.
"ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான்" என திவாகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

பதிலடி
"இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
இவ்வாறு சேரன் பதிவிட்டு இருக்கிறார்.
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது... சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.. ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை... https://t.co/ZogNrs8P7j
— Cheran Pandiyan (@CheranDirector) November 23, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் IBC Tamilnadu
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri