கையில் துப்பாக்கி, கோட் சூட், கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் இயக்குனர் சேரன்.. வெறித்தனமான லுக்
பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் சேரன். இப்படத்தை தொடர்ந்து வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தார்.
இயக்குனராக மட்டுமல்லாமல், தான் ஒரு நல்ல நடிகரென்றும் நிரூபித்தவர் சேரன். தொடர்ந்து பல சூப்பர்ஹிட்களை கொடுத்த வந்த சேரன், ஒரு கட்டத்தில் சில சில பிரச்சனையின் காரணமாக தடுமாற்றத்தை சந்தித்தார்.
இதன்பின், மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் கையில் துப்பாக்கி, கோட் சூட் அணிந்து கேங்ஸ்டர் லுக்கில் இருக்கிறார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படம்..