நடிகர் விஜய் ஒரு படத்தை முடித்தப்பிறகு அடுத்த படம் தொடங்கும் முன் பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்பார். அதில் எது சிறப்பாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து நடிப்பார்.
அப்படி விஜய்யே ஓகே சொன்ன ஒரு இயக்குனர் தன்னால் விஜய் நடிக்கும் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது என சொல்லி புலம்பி இருக்கிறார். சேரன் தான் அது.
சேரன்
ஆட்டோகிராப் படத்திற்கு பின் விஜய் கதை கேட்டார். நானும் கூறினேன். ஆனால் தவமாய் தவமிருந்து படம் முடிக்க லேட் ஆனதால், நான் விஜய்யிடம் சென்று படத்தை இப்போது தொடங்க முடியாது என கூறினேன்.
விஜய் படத்தை அப்போது மிஸ் செய்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவரை இயக்கி இருந்தால் நான் இன்று வேறு ஒரு உயரத்தில் இருந்திருப்பேன் என சேரன் கூறி இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
