நல்லது சொல்ல கூட இருங்க.. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.. கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் பதிவு
கரூர் துயர சம்பவம்
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது கரூர் சம்பவம். விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், நாளை தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு விஜய் வீடியோகாலில் பேசியுள்ளார். தனக்கு காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் நேரில் வந்து சந்திக்கிறேன் என கூறியிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க போவதாக ஒரு தகவல் வெளிவந்தது.
இயக்குநர் சேரன் பதிவு
இதற்கு இயக்குநர் சேரன், "உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார். ரொம்ப தவறா இருக்கு விஜய். நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது" என எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இயக்குநர் ஜான் மகேந்திரன்
இதற்கு இயக்குநர் ஜான் மகேந்திரன், "மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான ஆலோசனை. அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றால் ஏற்படும் குழப்பத்தை கற்பனை செய்து பாருங்க" என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதில் "ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும். ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கல. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போதுதான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்" என கூறியுள்ளார்.
ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும்..
— Cheran Pandiyan (@CheranDirector) October 11, 2025
ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கலை. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போத்தன் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க .. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம். https://t.co/WoOSgu7WXx
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan