திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு! அதிர்ச்சிக்கு உள்ளான சீயான் 60 படக்குழு..
இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சீயான் 60.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங்-ல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக நடிகர் துருவ விக்ரம் மற்றும் 90 படக்குழுவினர்கள் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் சென்றுள்ளனர்.
விமானம் புறப்பட்ட 55 வது நிமிடத்தில் கடலில் பறந்து கொண்டிருந்தது பின், விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு, அதிர்வு உண்டாகியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
அதன்பின் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பியுள்ளனர், மேலும் படக்குழு மறுநாள் விமானத்தில் டார்ஜிலிங் சென்றுள்ளனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri