பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சீயான் விக்ரம், யாருடன் உள்ளார் என பாருங்கள்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, மேலும் PS 1 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.
இதனிடையே இப்படத்தின் தனது பாகத்தின் ஷூட்டிங்கை ஒட்டுமொத்தமாக முடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சீயான் விக்ரம் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
