2K கிட்ஸை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 'சிக்லெட்ஸ்'
எஸ் எஸ் பி பிலிம்ஸ் A Srinivasan Guru தயாரித்து TCC நிறுவனம் வெளியிடும் Chiclets. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி உள்ளது.
திறந்திடு சீசே படத்தை இயக்கிய முத்து இப்படத்தை இரு மொழிகளில் இயக்கியுள்ளார். வலிமை துனிவு போன்ற படங்களை படத்தொகுப்பு செய்த விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
2K கிட்ஸ் மற்றும் முந்தைய தலைமுறையினர் இடையே இருக்கும் வித்தியாசம் மற்றும் பிரச்சனைகள் பற்றியது தான் படமாம்.
இந்த படத்திற்கு பாலமுரளி இசையமைத்து இருக்கிறார். வரும் பிப்ரவரி 2ம் தேதி தமிழ் மற்றும் தொலுங்கில் ஒரே நேரத்தில் சிக்லெட்ஸ் படம் திரைக்கு வர இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த படம் அதிகம் பிடிக்கும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.