இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தேசிய விருது பெற்ற நடிகை தான்
முன்னணி நடிகை
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வரும். அந்த வகையில், தற்போது நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளரின் மகளாக சினிமாவில் நுழைந்து கடின உழைப்பாலும், திறமையாலும் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அட இவரா
ரஜினி, விஜய் போன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான இந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.
தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளது. தேசிய விருது பெற்ற இந்த நடிகையின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
