சீனாவில் வெளியான கனா திரைப்படத்தின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா?
கனா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா.
இப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ்.
பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தை தயாரித்தது மட்டுமின்றி கேமியோ ரோலிலும் நடித்திருப்பார் சிவகார்த்திகேயன்.

சீனாவில் வெளியான கனா
இதனிடையே இப்படம் சமீபத்தில் சீனா மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு Indian Girl என்ற டைட்டிலில் வெளியானது.
மேலும் தற்போது இப்படத்தின் தற்போதைய நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அங்கு வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பெரிய வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களின் பட்டியல் ! யார் No.1