முன்பே தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன்.. மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி
பாடகி சின்மயி கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பாட தடை இருந்த நிலையில் தக் லைப் படத்தின் முத்த மழை பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர்.
அதற்கு பிறகு சின்மயி பல புது படங்களில் பாடல்கள் பாட தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் மோகன்.ஜி-யின் திரௌபதி 2 படத்தில் வரும் எம்கோனே என்ற பாடலை அவர் பாடி இருக்கிறார்.

மன்னிப்பு
மோகன்.ஜி படத்தில் பாடியதற்காக பலரும் சின்மயியை விமர்சித்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரி ட்விட் செய்து இருக்கிறார்.
"ஜிப்ரானை எனக்கு 18 வருடங்களாக தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. நான் போய் இந்த பாடலை வழக்கம்போல பாடிக்கொடுத்துவிட்டு வந்தேன். அப்போது ஜிப்ரான் அப்போது அங்கு இல்லை."
"அது என்ன பாடல் என்பது தற்போது தான் எனக்கு தெரிகிறது. அது முன்பே தெரிந்து இருந்தால் பாடி இருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாந்தம் என்னுடன் ஒத்து போகாது. இது தான் உண்மை" என சின்மயி பதிவிட்டு இருக்கிறார்.
At the outset, my heartfelt apologies for Emkoney.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 1, 2025
Ghibran is a composer I have known for 18 years since my jingle singing days. When his office called for this song, I just went & sang as I usually do. If I remember right, Ghibran wasn't present during this session - I was…