சின்மயி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றாரா? அவரே கொடுத்த விளக்கம்
பிரபல பாடகி சின்மயி தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக போட்டோவுடன் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அவர்களுக்கு Sharvas மற்றும் Driptah என பெயர் சூட்டி இருப்பதாகவும் சின்மயி தெரிவித்து இருக்கிறார்.
வாடகை தாய் மூலம் பெற்றேனா?
சின்மயி இதுவரை கர்ப்பமாக இருந்த போட்டோவை வெளியிடவே இல்லை, அதனால் அவர் வாடகை தாய் மூலமாக தான் இரட்டை குழந்தைகளை பெற்றாரா என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அதற்க்கு கோபத்தில் கூறி இருக்கும் சின்மயி, "எனது innermost circleல் இருப்பவர்களுக்கு மட்டும் நான் கர்ப்பமாக இருந்தது தெரியும். நான் என் சொந்த வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன். என் குழந்தைகளின் போட்டோவும் நீண்ட காலத்திற்கு வெளியிடமாட்டேன். "
"நான் சிசேரியன் செய்துகொள்ளும் போது கூட ஒரு பஜனை பாடினேன்" எனவும் சின்மயி கூறினார்.


சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
