பாடகி சின்மயிக்காக அவரது கணவர் செய்த அந்த செயல்.. இணையத்தில் வைரல்!
சின்மயி
சின்மயி, ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரெட் பாடகியாக மாறிவிட்டார். தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் தீ படத்தில் பாடிய பாடலை சின்மயி பாடியிருந்தார்.
இந்த பாடலை ரசிகர்கள் யூடியூபில் டாப் டிரெண்டிங் ஆக்கி கலக்கினார்கள். இந்நிலையில், பாடகி சின்மயின் கணவரும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன், ராஷ்மிகா மந்தனாவை வைத்து 'The Girlfriend' என்ற படத்தை எடுத்துள்ளார்.

அந்த செயல்!
இப்படத்தின் நிகழ்ச்சியில் ராகுல் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நான் அணிந்து இருக்கும் இந்த சட்டையில் ஸ்பெஷலான ஒரு விஷயம் இருக்கிறது.
அதாவது, என் மனைவி ஒரு 12 வருடங்களுக்கு முன்பு அதாவது நாங்கள் காதலித்து கொண்டிருந்த போது எனக்கு முதல் முதலாக எடுத்த சட்டை.
இன்று அவரால் இங்கு வர முடியவில்லை. அதனால் இந்த சட்டையை அணிந்து வந்தேன். இந்த வீடியோவை கண்டு அவர் மகிழ்ச்சி அடைவார்" என்று தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: நாட்டுப்புற கலைக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்கள்... இத்தனை பட்டப்படிப்பு படித்துள்ளார்களா? Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri