இரட்டை குழந்தைகள் பிறந்த மறுநாளே சின்மயிக்கு இன்ஸ்டாகிராம் கொடுத்த ஷாக்!
பாடகி சின்மயி தமிழ் சினிமாவில் மீடூ புகார் எழுப்பி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவர் பல பிரபலங்கள் மீது புகார் சொன்ன நிலையில் தொடர்ந்து மற்ற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாள் முன்பு தான் சின்மயி தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து இருந்தார். அவர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றார் என பரவிய செய்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இன்ஸ்டா முடக்கம்
இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. அவர் பல ஆண்கள் தனக்கு இன்ஸ்டா DMல் தகாத புகைப்படங்களை அனுப்புகிறார்கள் என புகார் கூறி இருந்தார்.
அப்படி மெசேஜ் அனுப்பியவர்களை விட்டுவிட்டு தனது கணக்கை நீக்கிவிட்டார்கள் என தனது பேக்கப் இன்ஸ்டா ஐடியில் இருந்து பதிவிட்டு இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
