சின்மயி மன்னிப்பு கேட்ட சர்ச்சை.. அவர் குரலே வேண்டாம் என முடிவெடுத்த திரௌபதி 2 தயாரிப்பாளர்
பாடகி சின்மயி மீ டூ புகார் கூறிய பிறகு அவரை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து அவர் பல வருடங்கள் அவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் மட்டுமே பாடி வந்தார்.
அவர் தக் லைஃப் படத்தின் விழாவில் முத்த மழை பாடலை மேடையில் பாடிய வீடியோ வைரல் ஆனது. அதனை தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதனால் மீண்டும் சின்மயி பாடல்கள் பாட தொடங்கி இருக்கிறார்.
அவர் மோகன்.ஜி இயக்கிய திரௌபதி 2ம் பாகத்தில் வரும் எம்கோனே என்ற பாடலை பாடி இருந்தார். அதனால் சின்மயியை சிலர் விமர்சித்த நிலையில், உடனே அவர் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டார்.

"அது என்ன படம், யார் இயக்குனர் போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாமல் பாடிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்" என சின்மயி பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு சின்மயியை ஒரு தரப்பு விமர்சிக்க தொடங்கியது. தக் லைஃப் படத்தில் வரும் முத்த மழை பாடல் விலைமாது பாடுவது போல தான் படத்தில் வரும், அதை ஏற்றுக்கொண்டு பாடிய சின்மயியா இப்படி பேசுகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
பாடல் நீக்கம்
இந்நிலையில் சின்மயி பாடிய பாடல் முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. வேறு ஒரு முன்னணி பாடகியின் குரலில் அந்த பாடல் இடம்பெறும் என திரௌபதி 2 பட இயக்குனர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்கள்.
இதனால் சின்மயி - திரௌபதி 2 சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.